1911 ஆம் ஆண்டு தமிழர் நலனுக்காய் தொண்டு தமிழ் முன்னேற்றம் எனும் சீரியச் சிந்தனையுடன் தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம் தன் வெள்ளி விழாவினை 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 16 ஆகிய தேதிகளில் நடத்தியது. திருக்கோவிலூர் அறநிலையம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தின் தலைவர் அருட்திரு சிவ. சண்முகமெய்ஞான சிவாச்சாரியார் முன்னிலையில் கரந்தைப் புலவர் கல்லூரி தோன்றியது. தமிழவேள் அவர்களின் கனவு நிறைவேறியது. அவரின் இடையூறாத முயற்சியால் பின்நாளில் 1941 ஆம் ஆண்டு ஏப்ரலில் சென்னைப் பல்கலைக்கழகத்தார் இக் கல்லூரியை நடத்த இசைவு வழங்கினர். இவ்புலவர் கல்லூரியில்பெரும் புலவர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களிடம் பயின்ற மாணவர்கள் தமிழகமெங்கும் ஏன் உலகெங்கும் தலைசிறந்த மாணவர்களாய் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படியாக ஒவ்வொரு நாளும் மிகச் சிறப்பான வகையில் மேன்மைப் பெற்று வந்த காலகட்டத்தில் 1975- 76 இல் புலவர் படிப்புக்கு மாற்றாக பி.லிட்.., பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சி ஒன்றினையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு விளங்கிய கரந்தையின் மாமனிதர் செம்மொழி வெளிர் திரு ச இராமநாதன் அவர்கள் இற்றை நாள் சூழலுக்காய் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியாக மாற்றம் பெறச் செய்தார். 1982 83 இல் எம்.ஏ., தமிழ் தொடங்க பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டமேலாய்வுத் துறைகள் கொண்டுவரப்பட்டன. தமிழ் மொழியின் சிறப்பை நாளும் எடுத்துரைக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இக்கல்லூரியில் தமிழ் உயிராய்வு மையம் ஒன்று தொடங்கப் பெற்றது. தமிழ் மொழியினை உயர்தனி செம்மொழியாக கனவு கண்ட தமிழவேள் உமாமகேசுவரனாரின் கனவுதனை நிறைவேற்றிட செம்மொழி வேளீர் திரு ச.இராமநாதன
Copyright © 2024 All Rights Reserved by Higglerslab